லேபிள்கள்

15.10.15

BT TO PG PROMOTION : கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த
நபர்களின்கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களில் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் 01.01.2015 நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பாட ஆசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு, பொருளியியல் வணிகவியல்)பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தகுதிவாய்ந்த ஒரு சில ஆசிரியர்களுடைய பெயர் விடுபட்டுள்ளதாகவும் ஒரு சில ஆசிரியர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு 24.08.2015 அன்று பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவ்வாறு பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஆசரியர்களில் 572 ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு விருப்பமின்மை தெரிவித்துள்ளதால் இப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலின் அடுத்துள்ள ஆசிரியர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கூடுதல் முனூனுரிமைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு கூடுதல் முன்னுரிமைப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கூடுதல் முன்னிரிமைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளும் வகையில் உரிய தகவல் அளித்து பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் தவறாது பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DSE PROMOTION PANEL PROCEEDINGS DOWNLOAD...
BT TO PG ADDITIONAL PROMOTION PANEL DOWNLOAD...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக