ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆவணத்தில் ஏதாவது தவறு இருந்தால், அது பற்றி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், துறையின் தலைமைக்கும் தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும். இதை, குறிப்பிட்ட காலவரைக்குள், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், ஓய்வு பெறும் போது, அதன் பலன்களை பெறுவதில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, எந்த தாமதமும் ஏற்படாது.
இவ்வாறு, உத்தரவில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக