வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக கை கழுவும் தினம், வரும், 15ம் தேதி கடைபிடிக்கப்படுவதால், 'யுனிசெப்' நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளி' என்ற அடிப்படையில், கை கழுவும் முறை, பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக