லேபிள்கள்

11.10.15

தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு தொழில்நுட்ப தேர்வுகள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ளன. ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கு தேர்வுகள் நடக்கும். 

இதை எழுத விரும்புவோர், வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்தந்த வருவாய் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம், 'ஆன் - லைனில்' புகைப்படத்துடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக