லேபிள்கள்

15.10.15

அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் ஏன் தாமதம்?.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்

 மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து நாட்களாகி விட்ட போதும் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் இருப்பது தமிழக அரசு ஊழியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவிக்கும். ஆனால் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து பல வாரங்களாகி விட்ட நிலையில் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் அமைதி காத்து வருகிறது. இது அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தியும் வெளிக் கிளம்பியுள்ளது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக