10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தனித் தேர்வர்கள் வசதிக்காக ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக