ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர்,
இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20 முதல் ஜன., 24 வரை திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்திய மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டிகள் ஜன., 30ல் துவங்குகிறது. பிப்., 3ல் நிறைவடைகிறது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள இப்போட்டியில் கேந்திரியா வித்யாலயா, சர்வோதயா பள்ளிகள் உள்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 400 பேர் பங்கேற்க உள்ளனர். 14, 17, 19 வயது என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. பங்கேற்க விரும்பும் அணிகள் ஜன., 10 முதல் ஜன., 24க்குள் பதிவு செய்து கொள்ளலாம் என, பள்ளிகல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி தேசிய மாணவர் கேரம் போட்டி 2016 ஜன., 20 முதல் ஜன., 24 வரை திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்திய மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட இப்போட்டிகள் ஜன., 30ல் துவங்குகிறது. பிப்., 3ல் நிறைவடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக