போலி ஆணையை காட்டி ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர முயன்றவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் 2013ல் ராமநாதபுரம் அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் பணியில் சேருவதற்கான பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் ஆணையை தலைமைஆசிரியரிடம் கொடுத்தார்.
அந்த ஆணையில் 'உயர்நிலைப்பள்ளி' என, இருந்ததால் சந்தேகமடைந்த தலைமைஆசிரியர் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வருமாறு கூறினார்.இதையடுத்து செல்வக்குமார், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணி உத்தரவு ஆணையை காட்டி ஒப்புதல் கடிதம் தருமாறு கேட்டார். சந்தேகமடைந்த முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரித்தார். இதில் செல்வக்குமார் கொடுத்தது 'போலிஆணை' என, தெரியவந்தது.முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு மணிவண்ணன் எஸ்.பி., யிடம் புகார் அளித்தார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக