லேபிள்கள்

28.12.15

பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் பல்வேறு வகையானவிடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோரமுடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச்சேர்ந்தவர் எம்.ஐயப்பன்.
 இவர்
1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப்பொறியாளராகப் பணிபுரிந்தபோதுசிங்கம்புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல்செய்யப் பட்டார்அவர் பணியில் சேராமல் 7மாதம் விடுமுறையில் சென்றார்அந்தவிடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல்16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில்சென்றார்பின்னர் 2-வது முறையாகசொந்தப்பணி இருப்பதாகக் கூறி மேலும் 90நாள் விடுமுறையில் சென்றார்அந்தவிடுமுறை முடிந்ததும் 3-வது கட்டமாகமருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்து17.4.1986 அதே ஆண்டு ஜுலை 17 வரை 92நாள் விடுமுறையில் சென்றார்அவர் 2-வதுமற்றும் 3-வது கட்டங்களில் எடுத்த 182 நாள்விடுமுறையை சம்பளம் இல்லா விடுமுறையாகக் கணக்கில் எடுக்கப்பட்டது.

இதை ரத்து செய்யவும், 182 நாள்விடுமுறையை சொந்தப்பணிக்காக எடுத்தஈட்டிய விடுப்பாகக் கருத உத்தரவிடக்கோரியும்ஐயப்பன் மனு தாக்கல் செய்தார்அவரதுமனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால்,அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்தார்இதை விசாரித்து நீதிபதிகள்வி.ராமசுப்பிரமணியன்என்.கிருபாகரன்ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இந்த மனுவை தாமதமாக தாக்கல்செய்துள்ளார்ஓய்வுபெறும்போது, 2-வது, 3-வது கட்ட விடுமுறையால் தனக்குப் பல்வேறுபாதிப்புகள் வரும்அரசுக்கு தான் பணம் கட்டவேண்டியது வரும் என்பதை தெரிந்து இந்தமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனு தள்ளுபடி


அரசு ஊழியர்கள் பல வகையானவிடுமுறையை தனது உரிமையாகக் கருதமுடியாதுஎனவே தனி நீதிபதி உத்தரவு உறுதிசெய்யப்படுகிறதுமேல்முறையீடு மனுதள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள்உத்தரவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக