லேபிள்கள்

27.12.15

'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியரிடையே, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு போட்டியிட விரும்பும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மாணவியர் தேர்வுஅந்த நிதியில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட, மாநில, தேசிய விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இவ்விருதுக்கு போட்டியிட பிற்படுத்தபட்டோர் மற்றும் பொதுப்பிரிவில், 4,612 பேரும், எஸ்.சி., பிரிவில் 1,621 பேரும், எஸ்.டி., பிரிவில் 60 பேரும் சேர்த்து மொத்தம் 6,293 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேரடியாக வரவுஇவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மாணவ, மாணவியரின் வங்கிக்கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக