அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 450 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சி.ராமமூர்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 1990 முதல் 2000 வரை தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்தவர்களை 10 ஆண்டுகளுக்கு பின் பணி வரன் முறை படுத்தப்பட்டனர். இவர்கள் தொகுப்பூதியத்தில் பணி புரிந்த ஆண்டுகளையும் பணிவரன்முறை யின் கீழ் கொண்டு வந்து ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டும். 50 மாணவர்களை கொண்ட விடுதிகளுக்கு இரு சமையலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் 209 விடுதிகளில் ஒரு சமையலரே பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை தவிர்க்க இவ்விடுதிகளில் இருசமையலர்களை நியமிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களை சீனியாரிட்டி அடிப்படையில் சமையலராக நியமிக்க வேண்டும். விடுதி பணியாளர்களை சீனியாரிட்டி, கல்வி தகுதி அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனராக நியமிக்க வேண்டுமென 2014 ஆகஸ்டில் அரசாணை வெளியிட்டும் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. 429 சமையலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் இன்று வரை தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
450 விடுதிகள்:
மேலும் 450 ஆண்கள் மாணவர் விடுதியில் இரவுகாவலர்கள் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் இரவில் மாணவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ, மாணவர்கள் வெளியில் சென்றாலோ பாதிப்பிற்குள்ளாக நேரிடுகிறது. இதை தவிர்க்க இரவு காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , என்றார்.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 1990 முதல் 2000 வரை தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்தவர்களை 10 ஆண்டுகளுக்கு பின் பணி வரன் முறை படுத்தப்பட்டனர். இவர்கள் தொகுப்பூதியத்தில் பணி புரிந்த ஆண்டுகளையும் பணிவரன்முறை யின் கீழ் கொண்டு வந்து ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டும். 50 மாணவர்களை கொண்ட விடுதிகளுக்கு இரு சமையலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் 209 விடுதிகளில் ஒரு சமையலரே பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை தவிர்க்க இவ்விடுதிகளில் இருசமையலர்களை நியமிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களை சீனியாரிட்டி அடிப்படையில் சமையலராக நியமிக்க வேண்டும். விடுதி பணியாளர்களை சீனியாரிட்டி, கல்வி தகுதி அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனராக நியமிக்க வேண்டுமென 2014 ஆகஸ்டில் அரசாணை வெளியிட்டும் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. 429 சமையலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் இன்று வரை தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக