லேபிள்கள்

29.12.15

'நெட்' தேர்வில் கெடுபிடி

நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது. அதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்; 


தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, புதிய நிபந்தனைகள், இந்த தேர்வில் அமலானது. தேர்வர்கள் யாரும் பேனா உட்பட எந்த பொருளும் கொண்டு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு, தேர்வறையில் பேனா வழங்கப்பட்டது; வாட்ச், ஹேர் பின் உட்பட எந்த பொருளும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. 


ஒரே நாளில், மூன்று தாள்களுக்கும் தேர்வுகள் நடந்தன. மத்திய அரசின், 'இ - பாட சாலை' குறித்தும், மத்திய அரசின் நிதியுதவியில் நடக்கும், 'ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ச அபியான்' குறித்தும் கேள்விகள் இருந்தன. மூன்றாம் தாளுக்கு, 'நெகட்டிவ்' மதிப்பெண் முறை அமலாகும் என, சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதனால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விசாரித்தபோது, எதிர்காலத்தில் நெகட்டிவ் மதிப்பெண் கொண்டு வர, திட்டமுள்ளதாக கூறினர்.

இந்த முறை, 'நெட்' தேர்வில், கேள்வித்தாள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. வரும் ஆண்டுகளில், நெட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் திட்டம் கொண்டு வந்தால், பேராசிரியர்கள் நியமனமும் தர மேம்பாடு அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக