உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே,
1ல்துவங்குகிறது. 'ஜூன், 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 21ல் பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.ஏப்., 22 முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 30ல் பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. அப்பள்ளிகளுக்கு, மே, 1 முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும், 2016 - 17ல், ஜூன், 1ல் திறக்கப்பட வேண்டும். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக