எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப் பீட்டில்கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களை ஆங்கில விடைத்தாள்களை
திருத்தச் சொல்லி கட்டாயப்படுத் துவதாக புகார் எழுந்துள்ளது.10-ம் வகுப்பு விடைத்தாள் மதிப் பீட்டில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் களை ஆங்கில விடைத்தாள்களை திருத்தச் சொல்வி கட்டாயப்படுத்துவதாக ஆண்டுதோறும் புகார்கள் எழுவதுண்டு.
இந்த ஆண்டு மதிப்பீட்டிலும் அதே சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் உள்ள ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஆங்கில விடைத்தாள்களை திருத்தச்சொல்லி மைய பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆங்கில விடைத்தாள்களுக்கான கீ ஆன்சர் கொடுக்கப்படும் என்றும் அதைப் பார்த்து விடைத்தாள்களை திருத்தம் செய்யுமாறும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள வேறு பாட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஆங்கில விடைத்தாள்களை ஆங்கில பாட ஆசிரியர்கள் திருத்துவதற்கும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய வேறு பாட ஆசிரியர்கள் திருத்துவதற்கும் வேறுபாடு உண்டு.கீ ஆன்சர் கொடுக்கப்பட்டாலும்கூட வேறு பாட ஆசிரியர்கள் திருத்துவதால் மாணவர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இதுபோன்று மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக கூறுகிறார்கள். கூடுதலாக ஆங்கில ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.தொடர்ந்து பல ஆண்டு களாகவே இதுபோன்று வேறு பாட ஆசிரியர்களை ஆங்கில விடைத்தாள்களை திருத்தச் சொல்லும் போக்கு இருந்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வேறு சில ஆசிரி யர்கள் கூறும்போது, “பட்டதாரி ஆசிரியர் என்றாலே அவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தெரிந்திருக்க வேண்டும். விடைத்தாளுக்கான கீ ஆன்ஸர் கொடுத்துவிடுகிறார்கள். எனவே, ஆங்கில விடைத்தாள்களை வேறு பாட ஆசிரியர்கள் திருத்துவதில் எவ்வித சிரமும் ஏற்படாது” என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக