புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிமாறுதல்,பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு, அவர்களது பழையகணக்கு எண்ணில் சந்தா பிடித்தம் செய்யாமல், புதிய கணக்கு துவங்கப்படுகிறது.இதனால் சிலருக்கு இரு கணக்கு எண் உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் இதுவரை சந்தா செலுத்தாத கணக்குகளும் ரத்து செய்யப்படும், என்றார்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக