லேபிள்கள்

22.4.16

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்.,
பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை:


கோவை, சேலம், திருநெல்வேலி, வேலுார், பர்கூர், அரசு பொறியியல் கல்லுாரி; காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி; கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று, பட்டயப் படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
* விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும் வேண்டும்
*www. ptbe-tnea.comஎன்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, www.ptbe-tnea.com இணையதள முகவரியில், 'Information and Instructions to Candidates' என்ற பக்கத்தில் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக