தமிழகத்தில்,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்,நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது.ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,வாயில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாதுஎன,இயக்குனரகம் தடை விதித்துள்ளது
இவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முகாம்,ஏப்ரல்16ம் தேதி தொடங்கியது. முதன்மை தேர்வர் மற்றும் கூர்ந்தாய்வர்களின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில்,உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
ஒவ்வொரு மையத்திலும், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுவது வழக்கம். இங்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,காலையில் வாயில் கூட்டம் நடத்தி,சங்கத்தின் சாதனைகளை நோட்டீஸாக வினியோகம் செய்வர். இதற்காக,நேற்று காலை முதல்,வாயில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டன.
தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்களிடம்,பிரசாரம் செய்ய வாய்ப்பிருப்பதால்,கூட்டம் நடத்துவது குறித்து சர்ச்சை இருந்து வந்தது.
இந்நிலையில்,இயக்குனரகத்திலிருந்து கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என,மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்,நேற்று வாயில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக