சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். மேலும் சம்பள உச்சவரம்பை தளர்வு செய்து சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தரப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் அறிவித்துள்ளார். ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம். 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படு்கிறது.
போனஸ் விவரம்
* மின்வாரியம், போக்குவரத்து, நுகர்பொருள், வாணிப கழகத்துக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
* வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரியம் உள்ளிட்டவைகளுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக