லேபிள்கள்

26.9.16

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

கோழிக்கோட்டிலுள்ள வேதவியாசர் வித்யாலயம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் அதிகம் பேருக்கு கல்வியை சென்று சேர்ப்பதில் குறிப்பிட்ட அளவு வெற்றி கண்டுள்ளோம். இதையடுத்து, அந்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
எனவே, பள்ளிகளின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் கணிதம், மொழி, எழுத்து மற்றும் படிப்புத் திறனை அறிவதற்கான தேர்வுகளை மத்திய அரசு நடத்தும்.
அரசுப் பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல்வேறு வகையான பள்ளிகளிலும் பயிலும் 3 சதவீத மாணவர்களிடம் இந்தத் தேர்வு நடத்தப்படும். அதன் மூலம், அந்தப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து தெளிவான விவரத்தைப் பெறலாம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக