லேபிள்கள்

25.9.16

தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியீடு: மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில் புதிய கல்வி கொள்கை இருக்கவேண்டும் லயோலா கல்லூரி நிர்வாகம் கருத்து

சென்னை, மாணவர்களிடம் மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில் தேசிய புதிய கொள்கை இருக்கவேண்டும் என்று லயோலா கல்லூரி செயலாளர் பாதிரியார் எஸ்.லாசர்
தெரிவித்தார்.மத்திய அரசு தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவை வெளியிட்டுள்ளது. இந்தவரைவு குறித்து சென்னை லயோலா கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் பாதிரியார் எஸ்.லாசர் கூறியதாவது:-வேலைவாய்ப்புதேசிய புதிய கல்விக்கொள்கையில் அனைத்து நிலை கல்வியிலும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்கல்வியில் முக்கியத்துவம் அளிக்கலாம். ஆனால் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை திணிக்கக்கூடாது. அந்த மாணவர்களுக்கு மனித நேயத்தை வளர்க்கவேண்டும்.அவர்களுக்கு நற்பண்புகள், ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கவேண்டும். அதை பள்ளிகளில் தான் அதிகம் வளர்க்க முடியும்.அனைவருக்கும் கல்விஅதுமட்டுமல்ல ஏழை, எளியவர்கள், மலைவாழ் மக்கள், கிராம மக்கள் உள்பட அனைவருக்கும் நடுநிலைப்பள்ளி கல்வி வரை கல்வி வழங்கவேண்டியது அரசின் கடமை. தேசிய கல்விக்கொள்கையில் சமூக நீதி இருக்கவேண்டும். சமூகத்தில் பின்தங்கியவர்கள் கல்வியில் புறக்கணிக்கப்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆற்றல் மிகுந்த கல்வி அளிப்பது வரவேற்கத்தக்கது.கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1-வது வகுப்பு முதல் 14 வயது வரை சேர்க்கப்படும் மாணவர்களில் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் பேர்களை பள்ளியில் சேர்க்கவேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு செலுத்தி விடுகிறது.சிறுபான்மையினர்ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த 25 சதவீதம் பொருந்தாது என்று ஏற்கனவே நீதிமன்றம் கூறி உள்ளது. 25 சதவீதத்தை விட அதிக சதவீத ஏழை மாணவர்கள் தான் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்கிறோம். எனவே இந்த புதிய கல்வி கொள்கையில் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது லயோலா கல்லூரி முதல்வர் பாதிரியார் எம்.ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக