லேபிள்கள்

27.9.16

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் 

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகாரஎல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்விபடிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசிஉத்தரவு
பிறப்பித்துள்ளது.



ஆனால், தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலைபல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்தமாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்விபடிப்புகளை நடத்த அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும்பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடரவிரும்புவோருக்கும் கைகொடுப்பதுதொலைதூரக்கல்வி படிப்பு கள்தான்(அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில்சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர்,கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்படஅனைத்து பல்கலைக்கழகங்களுமேதொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்திவருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர்சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்பபல்கலைக்கழகமான அண்ணாபல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்விதிட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்குகிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலானபல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில்வழங்கப்படுகிறது.
அதிகார எல்லை
                              ஒவ்வொருபல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகாரஎல்லை (Territorial Jurisdiction)வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்குசென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லைசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்தமாவட்டங்களில் உள்ள கல்லூரிகள்இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம்பெற்று செயல்படு கின்றன. அதேபோல்,தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லைமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களை உள்ளடக்கியது.
தற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகாரஎல்லையை தாண்டி தொலைதூரக்கல்விபடிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வுமையங் களையும் நிறுவி வருகின்றன. எந்தமாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்தபல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்விதிட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்துவருகிறது.
யுஜிசி உத்தரவு
                       இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டிதொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும்தேர்வு மையங்கள் அமைப் பதற்கும்பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடைவிதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகாரஎல்லையை தாண்டி தொலைதூரக்கல்விபடிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்துபல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவுபிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலைபல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம்முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளைநடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசிஅனுமதி அளித்துள்ளது.
யுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல்தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகாரஎல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான்தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும்.தேர்வு மையங் களையும் அமைக்க முடியும்உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம்இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்விபடிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமேதேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.
தமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலைபல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும்தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசிஅனுமதி அளித்திருப்பதாகஅப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்பேராசிரியர் எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம்தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டுநிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி.படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில்நடத்துவதற்கு யுஜிசி அனுமதிஅளித்திருப்பதாகவும் அப்படிப்புகள் விரைவில்தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யுஜிசி உத்தரவுக்கு தடை

                                      இதற்கிடையே, யுஜிசியின்உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்படபல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன.எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்துமாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்விபடிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்துசென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட்ஜவகரிடம் கேட்டபோது, “யுஜிசி உத்தரவுக்குஇந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடைஆணை பெற்றிருக்கிறோம். எனவே,வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள்அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டுவருகின்றன. எங்களைப் போன்று பலபல்கலைக்கழகங்களும் இது போன்று தடைஆணை பெற்றிருக்கக் கூடும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக