ஆதார் பதிவு பணிகளை நாளை முதல் தமிழக அரசே ஏற்க உள்ள நிலையில், அதற்காக 650 நிரந்தர மையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுநாள் வரை ஆதார் பதிவு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் அந்த பணிகளை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு, தமிழக தொழில்நுட்பத்துறை கேட்டு கொண்டது. இதற்கிணங்க ஆதார் பணிகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நாளை முதல் ஆதார் பதிவு பணிகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ சேவை மையங்களில் நிரந்தரமாக ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசின் எல்காட் நிறுவனம் சார்பில் 350 மையங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 கோடியே 21 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், அதில் 6 கோடியே 48 லட்சம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக