லேபிள்கள்

30.9.16

தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. 


தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக