பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த,
தனித் தேர்வர்களுக்கு, பள்ளிகளில், அறிவியல் செய்முறை தேர்வுக்கான, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்றவர்களுக்கு, பிப்., 20 முதல், 28 வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும், தனித் தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளுக்கு சென்று, தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக