லேபிள்கள்

14.2.17

TET விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும்?

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் இழுபறி நடந்துவருகிறது.

அதாவது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் எவ்வாறு அதனை சரியான முறையில் கையாள்வது என்று பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.


  தற்போது 14 லட்சம் விண்ணப்பங்கள் அனைத்தும் விற்பனை செய்யும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் இருக்கின்றன.

இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.நாளைக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டால் உடனடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக