லேபிள்கள்

13.2.17

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

"நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை எழுதிய கடிதம்:-



நாடு முழுவதும் மே 7-இல் நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு மார்ச் 1-இல் கடைசி நாளாகும்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் பிரதமர் அவசரமாகத் தலையிட வேண்டும்.
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை நீட் தேர்வு நிச்சயம் பாதிக்கும். அறிவார்ந்த மருத்துவர்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம் சிறந்த பொது சுகாதாரத்துக்காகவும், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லவும் எளிய மருத்துவர்கள் தேவை என்பதும் மிக முக்கியமானது.
மாணவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, தமிழக அரசால் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா திமுகவின் முழு ஆதரவுடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்வுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், அரசியல் சாசன நெருக்கடியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர பிரதமரின் ஒத்துழைப்பைக் கோருகிறேன். மேலும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக