தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 2ல், பிளஸ் 2 தேர்வு துவங்கியது.
மொத்தம், 2,434 தேர்வு மையங்களில், 9.33 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், 10ம் வகுப்புக்கான பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 10 லட்சத்து, 38 ஆயிரத்து, 22 பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், நான்கு லட்சத்து, 98 ஆயிரத்து, 406 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 95 ஆயிரத்து, 792 பேர் மாணவியர், 43 ஆயிரத்து, 824 பேர் தனித்தேர்வர்கள், சிறை கைதிகள், 229 பேர்.தேர்வில் பங்கேற்போரில், ஆறு லட்சத்து, 19 ஆயிரத்து, 721 பேர், தமிழ் வழியில் படித்தவர்கள். மொத்தம், 3,371 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வில் முறை கேடுகளை தடுக்க, 6,403 நிலையான மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளில், மாணவர்கள் காப்பியடிக்க, நிர்வாகம் மறைமுக ஏற்பாடு செய்யாதபடி, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில், அனைத்து மாணவர்களும் முதல் மொழி தேர்வை, கட்டாயமாக தமிழில் எழுத வேண்டும். பிற மாநிலங்களின் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களில், அந்த மொழிகளில் தேர்வு எழுத விண்ணப்பித்தோர், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில், 571 பள்ளிகளை சேர்ந்த, 26ஆயிரத்து, 384 மாணவியர் உட்பட, 51 ஆயிரத்து, 664 பேர், 209 மையங்களிலும், புதுச்சேரியில், 48 தேர்வு மையங்களில், 301 பள்ளிகளை சேர்ந்த, 8666 மாணவியர் உட்பட, 17 ஆயிரத்து, 570 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு அறையில், 'மொபைல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், பென் டிரைவ், பெல்ட், பர்ஸ்' மற்றும் காலணிகள், உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களோ, தனித்தேர்வரோ காப்பியடிக்க முயன்றால் அவர்கள் மீது, முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக