லேபிள்கள்

10.3.17

16 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

பகுதி நேர ஆசிரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி, ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட, எட்டு பிரிவுகளில், 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர பயிற்றுனர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தொகுப்பூதியத்தில், பல ஆண்டுகளாக, இவர்கள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக் கோரி, இன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணா விரத போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக