எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின், 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்பட உள்ளது. அதற்கான மாணவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில், திறன் அடிப்படையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசால், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.அவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளாக தேர்வு பெற்றவர்களுக்கு, நிதி உதவி வழங்கப்படவில்லை. பல மாணவர்கள், படிப்பை முடித்து வெளியேறி விட்டனர். இந்நிலையில், உதவித்தொகை வழங்குவற்காக, தேர்வு பெற்ற பழைய மாணவர்களின், 'ஆதார்' எண்களை சேகரிக்க, பள்ளி களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அவர்களின் வங்கி எண்களுடன், ஆதார் எண்ணை இணைத்து, பட்டியல் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதனால், பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களை, ஆசிரியர்கள் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக