லேபிள்கள்

8.3.17

சபிதா அதிரடி மாற்றம் : பள்ளிகல்வித்துறை வரவேற்பு

பள்ளிக் கல்வித்துறைக்கு, ஆறு ஆண்டுகளுக்கு பின், புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இனியாவது, தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயருமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பள்ளிக் கல்வித்துறை செயலராக, ஆறு ஆண்டுகளாக சபிதா பணியாற்றி வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அரசு அதிகாரிகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என்ற விதி இருந்தும், அவர் வேறு துறைக்கு மாற்றப்படவில்லை. அவரது தலையீடு காரணமாக, பாடத்திட்டத்தில் மாற்றம், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான அங்கீகாரத்திற்கு தடையின்மை சான்று அளித்தல், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியவில்லை. 

அமைச்சர்களை விட, செயலரே அதிக அதிகாரம் எடுத்து கொண்டதாக, பள்ளிக் கல்வி வட்டாரத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், பள்ளி கல்வி செயலர் பதவியிலிருந்து, சபிதா திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், தமிழ்நாடு உப்பு கழகத்தின் நிர்வாக இயக்குனர் உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். பள்ளி கல்வித் துறை திட்டங்களை, இன்னும் கூடுதல் அம்சங்களுடன் உதயசந்திரன் நிறைவேற்றுவார் என்றும், பள்ளி கல்வியின் தரம் உயர, புதிய திட்டங்களை கொண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக