லேபிள்கள்

6.3.17

'டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.
வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக