லேபிள்கள்

5.3.17

'டெட்' தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை

டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப்பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. 
கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான 
அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும். ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி., 
யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை 
புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக