எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு மதுரையில் நடந்தது. பதினெட்டு மையங்களில் நடந்த தேர்வில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 9,660 பேர் பங்கேற்றனர்; 800 பேர் தேர்வு எழுதவில்லை.
மதுரை, சென்னை, நெல்லை உள்ளிட்ட எட்டு இடங்களில் 'நீட்' தேர்வு நடந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும்; தவறான பதிலுக்கு, ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 1 சமச்சீர் பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., படித்ததால் எளிதானது . ஷபரினி, மதுரை : பத்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தேன். தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கை நடந்ததால், 'பிளஸ் 1'ல் மாநில பாடத் திட்டத்திற்கு மாறினேன். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவினால், 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. இரண்டு பாடத் திட்டங்களையும் படித்ததால் இத்தேர்வு எளிமையாக அமைந்தது.
சிறப்பு வகுப்புகள் சென்றும் பலனில்லை - ஓவியா, மதுரை: மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்தேன். 'நீட்' தேர்வுக்காக சிறப்பு வகுப்பு சென்றேன். இருப்பினும், தேர்வு கடினமாகவே இருந்தது. கேள்விக்கு தவறாக பதிலளித்தால் மதிப்பெண் குறைக்கப்படும் ('நெகட்டிவ்' மதிப்பெண்) என்பதால், சந்தேகமான விடைகளை கொண்ட கேள்விகளை புறக்கணிக்க நேர்ந்தது. மத்திய அரசுக்கு இணையாக நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
அரசு உறுதியாக தெரிவித்திருக்கலாம் .
சுப்ரஜா, புதுக்கோட்டை : பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கேட்கப்பட்டிருந்தன. துவக்கத்திலேயே 'நீட்' தேர்வு மூலம்தான் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு உறுதியாக தெரிவித்திருந்தால், அதற்கான சிறப்பு வகுப்புகள் சேர்ந்திருக்கலாம்.
அது, அதிக மதிப்பெண் பெற ஏதுவாய் இருந்திருக்கும். பாடத்திட்டத்தை சாராமல், சிந்தித்து பதிலளிக்கும் விதமாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மருத்துவப் படிப்பில் சேர நம்பிக்கை சுவேதா, திருமங்கலம் : மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் படித்திருந்தாலும், தேர்வு எளிமையாகவே இருந்தது. இயற்பியலில் அதிக கேள்விகள் பிளஸ் 1 பாடத்திலிருந்து கேட்கப்பட்டன. மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கைக்குட்டை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால், வியர்வையை சமாளிப்பது கடினமாக இருந்தது. அதற்கு பதில் 'டிஷ்யூ பேப்பர்' வழங்கியிருக்கலாம்.
பிளஸ் 1 பாடத்திலிருந்து கேள்விகள் நிவேதிதா, திண்டுக்கல்: இயற்பியல் பாட கேள்விகள் கடினமாகவும், உயிரியல் பாட கேள்விகள் எளிமையாகவும் இருந்தன. மெட்ரிக் பள்ளியில் பயின்றதால், பல்வேறு தகுதித் தேர்வு புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்து தேர்வுக்கு தயாராகுவது எளிதானது. பாடத் திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நன்றாக பதில் அளித்துள்ளேன். பிளஸ் 1 பாடத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதால், பள்ளிகள் அதனை புறக்கணிக்கக் கூடாது.
தகவல் மறுத்த ஒருங்கிணைப்பாளர் : 'நீட்' தேர்வு குறித்த விபரங்களை, மதுரை மைய ஒருங்கிணைப்பாளரான நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் செல்வராஜுவிடம் கேட்கும்படி, பத்திரிகையாளர்களுக்கு கலெக்டர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரிடம் கேட்டபோது, ''நீட்' தேர்வுக்கான மையங்களை தயார் செய்து, ஒருங்கிணைத்து நடத்துவது மட்டுமே என் பணி,'' என்றார். யாரிடம் கேட்டால் தகவல் கிடைக்கும் என கேட்டதற்கு, 'யாரிடம் கேட்டாலும் தகவல் கொடுக்க மாட்டார்கள்' என பதிலளித்தார். தேர்வு குறித்த விபரங்களை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரி, இவ்வாறு மெத்தனமாக பதிலளித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கெடுபிடிகள்: தேர்வு எழுத வந்த மாணவர்களிடம், சோதனை என்ற பெயரில் அதிக கெடுபிடி காட்டியதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பெண்களின் கூந்தலை கலைத்து பார்த்து சோதனையிட்டனர். முழுக்கை சட்டை அனுமதிக்கப்படவில்லை. மதுரை மாணவர்கள் பலருக்கு சென்னையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், பெற்றோர் ஆசிரியர் அதிருப்தியடைந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக