லேபிள்கள்

10.5.17

PGTRB - ONLINE APPLICATION FORM LINK & step by step instruction for Registration

Click here - Online Application form for Post Graduate Assistants


INSTRUCTIONS FOR REGISTRATION 
பதிவு செய்வதற்கான அறிவுரைகள்


  • In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.
  • Read fully the instructions given therein and click Apply Now.
  • The registration page opens up wherein, the candidate has to fill-in the online application form.
  • முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழி விண்ணப்பத்தினை பதிவுசெய்ய தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து, அதன்பின் Apply Now -ஐ கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்வதற்கான விண்ணப்ப பக்கம் திரையில் வரும், அதில் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.
Step:1

Fields indicated by * mark are mandatory.

Candidate has to fill- in the following basic information.
  1. Candidate’s Name
  2. Name of Father / Mother / Guardian
  3. Date of Birth
  4. Gender.
  5. Community
  6. Persons with Disability (Orthopedically Impaired/Visually Impaired) should choose their percentage of disabilities and choose whether they need scribe or not.
  7. Candidate should enter a valid E-Mail ID and confirm the same.
  8. Candidate should enter his/her Mobile Number, second Mobile Number is optional.
  9. Address for Communication: Candidate should enter his / her address as per the specification given therein.
  10. Enter a password of candidate’s choice with 8 to 15 characters and this password should be remembered by the candidates, as it is essential for further processing and future logins.
  11. Save the information you have entered:
நிலை:1

*குறியிடப்பட்டு காட்டப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

தேர்வர்கள் பின்வரும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.
  1. தேர்வரின் பெயர்
  2. தேர்வரின் தந்தை / தாயார் / காப்பாளர் பெயர்
  3. பிறந்த தேதி
  4. பாலினம்
  5. இனம்
  6. உடற்திறன் குறைபாடுடைய / விழித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது உடற்திறன் குறைபாட்டு சதவீதத்தை குறிப்பிடுவதுடன், தேர்வு எழுத சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்படவேண்டுமா என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  7. தேர்வர்கள் நடைமுறையில் உள்ள செல்லத்தக்க தங்களது மின்னஞ்சல் முகவரியை கண்டிப்பாக குறிப்பிடுவதுடன் அதனை மீளவும் உறுதி செய்யவேண்டும்.
  8. தேர்வர்கள் தங்களுடைய அலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இரண்டாவது அலைபேசி எண் குறிப்பிடுவது தேர்வரின் விருப்பத்தினைப் பொருத்தது.
  9. தொடர்பு முகவரி: தேர்வர்கள் தங்களது தொடர்பு முகவரியை உரிய கலத்தில், அங்கே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
  10. தேர்வர்கள் தாங்கள் விரும்பும் 8 முதல் 15 எழுத்துக்களைக் கொண்ட கடவுச்சொல்லை பயன்படுத்துக. தொடர்ச்சியாக விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், பின்னர் உள்நுழைவதற்கும் (Future Login) இந்த கடவுச்சொல் முக்கியமானது ஆகும். இதனை கண்டிப்பாக தவறாமல் நினைவில் கொள்ள வேண்டும்.
  11. தாங்கள் பூர்த்தி செய்த விவரங்களை பதிவு செய்க
Step:2
  • A confirmation screen with all the data filled by the candidate will be displayed.
  • Candidates are advised to verify the details given therein, especially those fields highlighted in Blue Colour. Once registered, these fields CANNOT be modified.
  • If there are any errors, rectify the same using Edit data option. Otherwise Submit the same.
நிலை:2
  • தேர்வரால் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை உறுதி செய்யும்பொருட்டு ஒரு படிவம் திரையில் தோன்றும்.
  • தேர்வர்கள் அத்திரையில் தெரியவரும் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும். குறிப்பாக நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள விவரங்களை மீளவும் சரிபார்த்துக்கொள்ளவும். இவ்விவரங்கள் ஒருமுறை பதிவு செய்யப்பட்டு விட்டால், மீளவும் கண்டிப்பாக மாற்ற இயலாது.
  • அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின், Edit Data - ஐ பயன்படுத்தி அவ்விவரங்களை சரிசெய்து கொள்ளவும். தவறேதும் இல்லையெனில் Submit - ஐ பயன்படுத்தி சமர்ப்பிக்கவும்.
Step:3
  • On submission, an email and SMS will be sent to the candidate’s registered email ID and mobile number and an acknowledgement will be displayed. The acknowledgement will contain a unique registration number. Candidates are advised to note the registration number, as it is essential for further processing and future logins.
நிலை:3
  • சமர்ப்பித்தவுடன், தேர்வரால் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு ஒரு ஒப்புகை அனுப்பி வைக்கப்படும். மேலும் ஒரு ஒப்புகை திரையில் தோன்றும். ஒப்புகையில் ஒரு பிரத்யேக பதிவு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பதிவுஎண்ணை தவறாது குறித்து வைத்துக்கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இப்பதிவு எண், தொடர்ச்சியாக விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கும், பின்னர் உள் நுழைவதற்கும் முக்கியமானதாகும்.
Step:4
  • Click Login: Login, using the generated registration number and password. Fill in the Educational Details and main subjects studied in UG degree, PG Degree.
  • For the Direct Recruitment of PG Assistants, candidates should have studied the same subject in BOTH Bachelor’s degree and Master’s degree, both for academic subjects and Languages. For the post of Physical Director Grade-I, the candidates may possess any UG Degree with M.P.Ed. degree.
  • After filling in the UG degree and PG degree details, the post applied for will be displayed automatically.
  • ONLY those candidates who have Higher Secondary class teaching experience as a Post Graduate Teacher in the applied post, after completing all the required qualifications for the post, alone should fill-in the teaching experience field.
  • ONLY those candidates who have registered in Professional and Executive Employment Exchange after completing all the required qualifications for the post alone should fill-in the date of registration.
  • Candidate has to choose the exam district of their choice, however the Board reserves its right in the allocation of exam district.
  • Read the declaration, tick the check boxes and click SUBMIT.
நிலை:4
  • Click Login:தேர்வரது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழைக. கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பட்டத்தில் பயின்ற முதன்மைப் பாடத்தை பூர்த்தி செய்க.
  • முதுகலை மொழியாசிரியர் மற்றும் பாட ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு, தேர்வர்கள் ஒரே முதன்மைப் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தினை பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடத்திற்கு தேர்வர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியில் முதுகலைப் பட்டம் (M.P.Ed.) பெற்றிருக்க வேண்டும்.
  • இளங்கலை மற்றும் முதுகலை பட்ட விவரங்களை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்பிக்க விரும்பும் பதவி தானாக திரையில் தோன்றும்.
  • விண்ணப்பிக்கும் பாடத்தில் முதுகலை ஆசிரியருக்குரிய அனைத்து கல்வித்தகுதிகளையும் பெற்றபின்னர், மேல்நிலை வகுப்புகளுக்கு அப்பாடத்தில் முதுகலை ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்கும் தேர்வர்கள் மட்டும் பணி அனுபவத்தினை பூர்த்தி செய்யவேண்டும்.
  • பணியிடத்திற்கு உரிய அனைத்து கல்வித்தகுதிகளையும் பெற்ற பின், அதனை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள தேர்வர்கள் மட்டும் பதிவுசெய்த நாளை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் மாவட்டத்தினை தெரிவு செய்யவேண்டும். எனினும் தேர்வு எழுதும் மாவட்டத்தினை ஒதுக்கீடு செய்யும் உரிமை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரியது.
  • உறுதிமொழியினை படித்துப் பார்க்கவும். சரிபார்க்கும் கட்டத்தில் டிக் செய்க. பின் SUBMIT – ஐ கிளிக் செய்க.
Step:5
  • Upload Photograph and Signature: All the candidates are required to upload their scanned recent colour passport port size photograph and signature.
  • The file size of the photograph should be between 15 kb to 50 kb and that of the signature should be between 5 kb to 20 kb.
  • The Online application system will not allow to upload any files smaller or larger than the above mentioned sizes.
  • All candidates have to upload his/her photograph and signature only in “jpg/jpeg format”
    Once the photograph and signature files are uploaded by the candidate successfully, the system will show on the screen the Photograph and Signature that has been uploaded. If these have been correctly uploaded, you should now proceed further to make payment through the online payment mode.
நிலை:5
  • புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை பதிவேற்றம் செய்க: அனைத்து தேர்வர்களும் தங்களது சமீபத்திய வண்ண புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை பதிவேற்றம் செய்வது அவசியமாகும்.
  • புகைப்படக் கோப்பின் அளவானது 15 kb முதல் 50 kb வரையிலானதாகவும், கையொப்ப கோப்பின் அளவானது 5 kb முதல் 20 kb வரையிலானதாகவும் அமைந்திருக்க வேண்டும். மேற்கண்டுள்ள அளவை விட குறைவானதாகவோ அல்லது அதிகமானதாகவோ கோப்பின் அளவு இருப்பின், அதனை இணையவழி விண்ணப்பிப்பதற்கான அமைப்பானது பதிவேற்றம் செய்ய அனுமதிக்காது.
  • அனைத்து தேர்வர்களும் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை “jpg/jpeg format” ல் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • புகைப்படம் மற்றும் கையொப்பம் தேர்வரால் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின், புகைப்படம் மற்றும் கையொப்பம் திரையில் தெரியும். இவை சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், தேர்வுக் கட்டணத்தினை இணையவழி செலுத்துவதற்கு மேற்கொண்டு தொடரலாம்.
Step:6
  • Make payment of examination fee only through online mode. The fee for examination is Rs.500/- (for SC/ST and differently abled persons Rs.250/-) + service charges extra.Payment can be made either by Credit Card / Debit Card / Net Banking / Wallets.
நிலை:6
  • தேர்வு கட்டணத்தினை இணையவழியாக மட்டுமே செலுத்தவும். தேர்வுக் கட்டணம் ரூ.500/- (ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.250/-) மற்றும் சேவைக் கட்டணம் தனி. தேர்வுக் கட்டணத்தை பின்வரும் ஏதேனும் ஒரு முறையினை மட்டுமே பயன்படுத்தி செலுத்த இயலும். கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய வழி வங்கி பரிமாற்றம் (Net Banking) / இணைய வழி பணப்பரிமாற்ற மென்பொருள் (Wallets)
  •  
    For OC/BC/BCM/MBC/DNC
    Payment OptionsExam FeeTotal Amount Payable Including Convenience Charges
    Credit Card500508.63
    Debit Card500508.63
    Net Banking500517.25
    Wallets500514.38
    Jio Wallet500502.82
    Amex/JCB Cards500517.25
    For SC/ST or Differently Abled
    Payment OptionsExam FeeTotal Amount Payable Including Convenience Charges
    Credit Card250254.31
    Debit Card250254.31
    Net Banking250267.25
    Wallets250257.19
    Jio Wallet250251.41
    Amex/JCB Cards250258.63
Step:7
  • Upon successful payment acknowledgement will be displayed. Applicant shall save and print the acknowledgment receipt.
நிலை:7
  • தேர்வுக் கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டவுடன் ஒரு ஒப்புகைச் சீட்டு திரையில் தோன்றும். தேர்வர்கள் ஒப்புகைச் சீட்டினை சேமித்து அச்செடுத்துக் கொள்ளலாம்.
Step:8
  • Take a printout of the application for the Direct Recruitment of PG Assistants and preserve the same for future reference.
நிலை:8

  • முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான விண்ணப்பத்தினை அச்செடுத்துக் கொள்வதுடன் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக