லேபிள்கள்

11.5.17

முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு : தமிழக அரசின் நிலை என்ன?

முதுநிலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழகத்தில், முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிகளின்படி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, கவுன்சிலிங் நடந்து வருகிறது.


இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இரு டாக்டர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். 'தமிழக அரசும், மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது அவசர சட்டம் இயற்ற வேண்டும்' என, அரசு டாக்டர்கள் கோரி வருகின்றனர். 

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கவுன்சிலிங் நடந்து வருகிறது. மேல்முறையீடு செய்வது குறித்து, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே, 'நீட்' தேர்வு தொடர்பாக இயற்றப்பட்ட அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுக்கு போகாமல், உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. மீண்டும், மற்றொரு அவசர சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக