பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆண்டுதோறும், வார விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி அளிக்கப்படும்.
இதன்படி, கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், ஐந்து நாள் பயிற்சி இன்று துவங்குகிறது. மாவட்ட வாரியாக, 55 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியில், தானாக முன்வந்து பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடை வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, பெண்களால் அலைய முடியாது என, பல காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, பல ஆசிரியர்கள் அடம் பிடித்துள்ளனர். பயிற்சி திட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்கள் சங்கங்கள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள் இருந்தால், ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். தரமான கல்வியை வழங்கினால் தான், அரசு பள்ளிகளும் இருக்கும்.
அதற்கு, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கள் அவசியம். அந்த பயிற்சியை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுடன், அரசே தருகிறது. தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், விடுப்பு நாட்களிலும், பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த பணத்தில், வெளியே உள்ள மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்று, தரமான பாடம் நடத்துகின்றனர். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையாக உள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், 'பயிற்சிக்கும் வரமாட்டேன்; பாடம் நடத்தவும் மாட்டேன்' என, அடம் பிடிக்கக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக