லேபிள்கள்

7.5.17

'செட்' தேர்வு: அரசு எச்சரிக்கை

'பேராசிரியர் பதவிக்கான, 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, குறுக்கு வழியில் முயற்சிக்க வேண்டாம்' என, உயர் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, 'செட்' என்ற மாநில தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடந்தது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்க உள்ளது. 

இந்நிலையில், செட் தேர்வில் தேர்ச்சி பெற, திருவள்ளுவர் பல்கலை அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் சிலர், பணம் பெறுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தரகர்கள் பலர், மூன்று முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, செட் தேர்வை நடத்தும், கொடைக்கானல் தெரசா பல்கலை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வர்கள் யாரும் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டாம். 'செட் தேர்வு விடைத்தாள் திருத்தம், மிகவும் பாதுகாப்பான முறையில் நடக்கிறது. யாரும் பணம் கொடுத்து, ஏமாற வேண்டாம். இது குறித்து, ஆதாரபூர்வமாக புகார் வந்தால், ம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக