லேபிள்கள்

10.5.17

போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் திட்டம்

தமிழக அரசால், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைந்த பின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டும். மேலும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் 17ம் தேதியும், சென்னையில், 24ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மே, 27ம் தேதி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும், 30ம் தேதி சென்னையிலும், கோரிக்கை விளக்க கூட்டங்கள் நடைபெறும். ஜூன், 12 முதல், சென்னையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக