லேபிள்கள்

28.7.17

அண்ணாமலை பல்கலையில் 29, 30ல் இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணாமலை பல்கலையில், இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு, நாளை துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 2017 - 18 கல்வி ஆண்டில், பொறியியல் பாடப் பிரிவில், 1,020 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 'ஆன்லைன்' மூலம், 1,655 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியில்லாத, ஒன்பது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நாளை, நாளை மறுநாள் ஆகிய, இரு நாட்கள் நடக்கிறது. 1,646 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம், 'ஆன்லைன்' மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அனுமதி கடிதத்தை, பல்கலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இத்தகவலை பல்கலை பதிவாளர் ஆறுமுகம் 
தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக