பி.ஆர்க்., படிக்க, பிளஸ் 2 மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், தமிழக அரசின் நுழைவு தேர்வில், விண்ணப்ப பதிவு மிக குறைவாக உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,
பெரும்பாலும் இன்ஜினியரிங், மருத்துவம் ஆகிய படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். இதை விட்டால், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பி.எஸ்சி., பி.காம்., சேர்கின்றனர்.
எண்ணிக்கை குறைவு : ஆனால், அதையும் தாண்டி பல்வேறு சிறப்பு படிப்புகள் உள்ளதை, தமிழக மாணவர்கள் விரும்புவதில்லை. சட்டப்படிப்பிற்கு விண்ணப்போரின் எண்ணிக்கை குறைவே.
இந்நிலையில், பி.இ., சிவில் படிப்புக்கு இணையாக, பி.ஆர்க்., படிப்பு உள்ளது. இதில், சேர்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த படிப்புக்கு நுழைவு தேர்வு உள்ளது என்பதால், பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு, பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வில், 2,009 பேர் மட்டுமே, தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழக கல்லுாரிகளில், 3,000 இடங்கள் உள்ளன. எனவே, மீதமுள்ள இடங்களை நிரப்ப,
தமிழக அரசின் சார்பில், 'நாட்டா' பாடத் திட்டத்தின்படி, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, வரும், 31ம் தேதி முடிகிறது. ஆனால், இதுவரை, 400க்கும்
குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர்.அதே நேரம், 1,000 இடங்கள் வரை காலியாக
உள்ளன. நகரமைப்பு திட்டங்கள், ஸ்மார்ட் மற்றும் துணை நகரங்கள் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்டுமான தொழில், கட்டடக்கலை தொழில்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளன.
இணையதளத்தில் பதிவு : அதற்கு, முக்கிய தேவையான, பி.ஆர்க்., படிப்புக்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்தே காணப்படுவதாக, ஆர்கிடெக்சர் வல்லுனர்களும், பேராசிரியர்களும்
தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின், பி.ஆர்க்., நுழைவு தேர்வை எழுத விரும்புவோர், வரும், 31ம் தேதிக்குள், அண்ணா பல்கலையின், www.annauniv.edu இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக