அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல், போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.
அரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், உடற்கல்வி பிரிவுக்கு, எந்தவித முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும், உடற்கல்வி பயிற்சி நடக்கும் நாளில், சிறப்பு சீருடை, 'கேன்வாஸ், சாக்ஸ்' அணிய வேண்டும்.
ஆனால், தமிழகத்தில், இலவச சீருடையில், விளையாட்டு பிரிவுக்கு என, தனியாக சீருடை வழங்கவில்லை. அரசு பள்ளிகளில் விளையாட்டு பிரிவுக்கு உபகரணங்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை, உபகரணம் வாங்க பயன்படுத்துவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. விளையாட்டு பிரிவுக்கு தனி இணை இயக்குனர், மாவட்ட அளவில் தலைமை
உடற்கல்வி ஆய்வாளர் போன்ற பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
மேலும், உடற்கல்விக்கான பாடத்திட்டம் வழங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உடற்கல்விக்கு புத்தகம் தயாரித்தும், அதை வழங்கவில்லை. 6 - 9ம் வகுப்பு வரை, உடற்கல்விக்கு
கட்டாய தேர்வு உள்ளது. ஆனால், பாடத்திட்டமும், புத்தகமும் இல்லாமல், தேர்வு நடத்தியது போல், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்த குளறுபடிகளை போக்கவும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை நிறுத்தாமல் வழங்கவும் கோரி, வரும், 29ல், உடற்கல்வி ஆசிரியர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், போராட்டம் நடத்த உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக