லேபிள்கள்

29.7.17

பள்ளிக்கல்வி துறையில் தொடர் போராட்டங்கள் துவக்கம்

பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு சங்கங்கள் சார்பிலான போராட்டங்கள் நேற்று துவங்கின. இன்று ஒரு தரப்பினரும், வரும், 5ம் தேதி ஒட்டுமொத்த சங்கத்தினரும் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை, ஆறு ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டத்தில் மாற்றம், தேர்வில் புதிய நடைமுறை என, பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அறிவித்து உள்ளது. 
அதே நேரம், ஆசிரியர்கள் நியமனம், அலுவலக நிர்வாகம், பள்ளிகளின் பராமரிப்பு பணி போன்றவற்றில், இன்னும் குளறுபடி நீடிப்பதாக புகார்கள் உள்ளன.இதற்கு தீர்வு கோரி, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழகம் முழுவதும், நேற்று, பள்ளிக்கல்வி 
அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

இதுகுறித்து, சங்க தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ''பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிர்வாக பணிகளில்ஆசிரியர்களின் தலையீட்டை நிறுத்தவும், தேர்வு 
பணிகளுக்கு தனியாக ஊழியர்கள் நியமிக்கவும் கோரி, முதற்கட்ட போராட்டம் நடத்தி 
உள்ளோம்,'' என்றார்.இதை தொடர்ந்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில், வள்ளுவர் கோட்டம் முன், இன்று, உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். ஆக., 5ல், 25க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள், கல்வித்துறை ஊழியர் 
சங்கங்களுடன், அரசு ஊழியர்கள் இணைந்த, ஜாக்டோ - ஜியோ சார்பில், கோட்டை நோக்கி பேரணி நடக்கிறது. ஆக.,22ல், ஒரு நாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த தொடர் போராட்டங்களால், பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக