லேபிள்கள்

24.7.17

ஒரே 'நீட்' வினாத்தாள் தான்! : மத்திய அமைச்சர் உறுதி

''மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு வினாத்தாள், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும்,'' என, பா.ஜ.,வை சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, நீட், நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது; ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது.


இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. வங்க மொழியில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் கடினமாக இருந்ததாக, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.


இதுபற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
மாநில மொழிகளில் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக கூறுவது தவறு; ஒரே மாதிரியாக தான் தயாரிக்கப்பட்டது. இனிமேல், ஆங்கில வினாத்தாளின் மொழி பெயர்ப்பாகவே, மற்ற மொழி, வினா தாள் இருக்கும்; இதன் மூலம், அனைத்து வினாத்தாள்களும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக