லேபிள்கள்

6.11.17

10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (06.11.2017) விடுமுறை

 கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும்(நவ.,6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், கடந்த வாரம் பல மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும்(நவ.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.

மேலும் அரக்கோணம் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக