மாதவிடாய் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவி யருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஷி பேட்' என்ற புதிய திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. பள்ளி மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஷி பேட்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, 'பேஸ்புக்' சமூகதளத்தில், முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
பள்ளிகளில், 6 - பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், இலவசமாக, நேப்கின்கள் வழங்கப்படும். அதை வைப்பதற்கான வசதி, சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த, 'இன்சினிரேட்டர்' வசதி செய்யப்படும். முதல்கட்டமாக, 144 பஞ்சாயத்துகளில் உள்ள, 300 பள்ளிகளில் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. படிப்படியாக, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மாதவிடாய் குறித்து மாணவியருக்கு உள்ள தவறான எண்ணங்கள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக