லேபிள்கள்

8.11.17

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இயல்பு வாழ்க்கை
பாதிப்படைந்தது. கனமழையினால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அதிக சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் கூடுதலாக பள்ளிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின.
எனினும், நாகையில் கனமழையால் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பொறுப்பு ஆட்சியர் சக்திமணி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக