லேபிள்கள்

7.11.17

பள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை

பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.
தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும். இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக