லேபிள்கள்

12.12.17

சி.பி.எஸ்.இ. 10, 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது. தற்போது, கிரேட் முறை பின்பற்றப்படும் நிலையில், இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும், 10–ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் ஆவதாகவும் சி.பி.எஸ்.இ. மீண்டும் தெரிவித்துள்ளது.

10–ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் (தொடர்பு), ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) ஆகிய பாடங்களுக்கும், 12–ம் வகுப்பு தேர்வில் கணக்கு பதிவியல், உயிரியல், வணிக கல்வி, வேதியியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

மதிப்பெண் முறையை இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என்றும், தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக