'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன; இதனால், பெரும்
சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
'நீட்' தேர்வை, ஹிந்தி மற்றும் ஆங்கில வழியில் தான், பெரும்பாலோர் எழுதுகின்றனர். மாநில மொழிகளில், குறைவானவர்கள் தான் எழுதுகின்றனர். அதனால் தான், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக