பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, பெற்றோரின் கணக்கில் செலுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்காமல், தனியே தவிக்கவிடுவது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மாநில அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தது; அதில் கூறப்பட்டுள்ள தாவது:பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அந்த தொகையை, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும்.
ஒரு பெற்றோரின் நான்கு பிள்ளைகள் அரசு பணியில் இருந்தால், ஒவ்வொருவரிடமும், தலா, 2,000 ரூபாய் வீதம் வசூலித்து, பெற்றோரின் அடிப்படை தேவைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில், 'பெற்றோர் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு மசோதா' ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, வயதான பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற சகோதர,சகோதரியரை பராமரிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 சதவீதம் பிடித்தம் செய்யவும், அந்த தொகையை, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தவும்
வகை செய்யப்பட்டுஉள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக